ஆவின் நிறுவனத்தில் 460 காலிப்பணியிடங்கள்.. இளைஞர்கள் வயிற்றில் பால் வார்க்கும் அரசு அறிவிக்கை! | Aavin invites 460 job vacancies in Tamilnadu

0
40

Jobs

oi-Vishnupriya R

|

சென்னை: தமிழக கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் சார்பில் ஆவின் நிறுவனத்தில் 460 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மூத்த ஆலை உதவியாளர் (பால் உற்பத்தி) பணியிடத்திற்கு 170 இடங்களும், மூத்த ஆலை உதவியாளர் (ஆய்வகம்) பணியிடத்திற்கு 20 இடங்களும், மூத்த ஆலை உதவியாளர் (கால்நடை), மூத்த ஆலை உதவியாளர் (நிர்வாகம்), மூத்த ஆலை உதவியாளர் (பொறியியல்) தலா 70 இடங்களும் மூத்த ஆலை உதவியாளர் (மார்கெட்டிங்) 60 இடங்களும் என மொத்தம் 460 காலியிடங்கள் உள்ளன.

Aavin invites 460 job vacancies in Tamilnadu

சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும். தேர்வு செய்வோருக்கு ஊதியமாக மாதத்திற்கு 15700 ரூ முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

Aavin invites 460 job vacancies in Tamilnadu

இதற்காக குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் 30 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 வயதும், எஸ்சி, அருந்ததியர், எஸ்டி பிரிவினருக்கு 35 வயதும் நிரம்பியிருக்க வேண்டும்.

8-ஆம் வகுப்பு முதல் எம்பிஏ வரை.. புதுக்கோட்டையில் மெகா வேலைவாய்ப்பு மேளா!

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ரூ 250 விண்ணப்பக் கட்டணம் அளிக்க வேண்டும். இதை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 5 ஆகும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு www.aavinfedrecruitment.com, www.aavinmilk.com என்ற இணையதள முகவரிகளை அணுகலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

நன்றி

READ  'ரூ.1,200-க்கு அசத்தல் உபகரணம்!' - கோவை வேளாண் விஞ்ஞானிகளுக்கு தேசிய தண்ணீர் விருது | ICAR-Sugarcane Breeding Institute awarded for launching SMI | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online