சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கான 100 நாள் பிரச்சாரத்தை நாளை திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்குகிறார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே தொடக்கத்திலோ நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருக்கிறது.