திருவண்ணாமலை: சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
மாணவி வினிஷாவின் முயற்சிகளுக்கு அவர் படிக்கும் பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து அனைத்து ஒத்துழைப்பும் தந்து ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சுற்றுச்சூழலை காக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டி வாகனத்தை வடிவமைத்திருக்கிறார் வினிஷா.