நைட் ஷிப்ட் பார்ப்பவர்களை ஆஸ்துமா அட்டாக் பண்ணும் வாய்ப்பு அதிகமாம் – ஆய்வு சொல்லுது | Night shift workers at high risk of severe asthma: Study

0
15

Chennai

oi-Jeyalakshmi C

|

சென்னை: நைட் ஷிப்ட் பார்க்கும் ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் பகல் நேர வெளிச்சத்தில் வேலை செய்பவர்களை விட இரவு நேர வெளிச்சத்தில் வேலை செய்பவர்களுக்கு உடலில் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுவே நோய்கள் ஏற்பட காரணமாகிறது.

நைட் ஷிப்ட் வேலைகள் உடலின் இயற்கை கடிகாரத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதால், நாம் நினைத்திராத பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வைக்கிறது. நீங்கள் நைட்-ஷிப்ட்டில் வேலை செய்பவரா? அப்படியானால் உங்களுக்கும் இப்பிரச்சனையெல்லாம் வர வாய்ப்புள்ளது.

ஒழுங்கற்ற வேலை ஷிப்ட்டுக்கள் தூக்க முறைகளை சீர்குலைக்கும் மற்றும் தூக்கத்தை இழக்கச் செய்யும். பொதுவாக உடலின் இயற்கை கடிகாரத்திற்கு எதிராக செயல்படும் போது ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். அதிலும் நைட்-ஷிப்ட்டில் வேலை செய்தால், ஒருவரது ஆரோக்கியம் மட்டுமின்றி, சிறப்பாக செயல்படும் ஆற்றலும் பாதிக்கப்படும். மேலும் நைட்-ஷிப்ட்டில் வேலை செய்வோர் கவனக் குறைவாக இருக்கக்கூடும்.

மன அழுத்தம் அதிகரிக்கும்

மன அழுத்தம் அதிகரிக்கும்

நைட் ஷிப்ட் மன இறுக்கத்திற்கான அபாயத்தை அதிகரிக்கும். ஏனெனில் இரவு நேரத்தில் கிர்காடியன் அமைப்பின் இயற்கை செயல்பாட்டிற்கு இடையூறை உண்டாக்கும் வகையில் வேலை செய்வதால் மன இறுக்கம் அதிகரிக்கும். மேலும் இது சந்தோஷத்தைக் பாழாக்கும் குடும்பத்தில் சில பிரச்சனைகளை உண்டாக்கி, நெருக்கமானவர்களை விட்டு விலகச் செய்யும்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

இந்த தவறான வடிவமைப்பு பல்வேறு வளர்சிதை மாற்றக் கோளாறுகள், இருதய நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றின் அபாயத்துடன் தொடர்புடையது என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்துமா அறிகுறிகள், மூச்சுத்திணறல் மற்றும் காற்றுப்பாதை விசில் போன்றவை பகல் அல்லது இரவு நேரத்திற்கு ஏற்ப கணிசமாக வேறுபடுகின்றன, மேலும் ஆஸ்துமா மற்றும் அல்லது அதன் தீவிரத்தன்மைக்கும் ஷிப்ட் வேலைக்கும் எதுவும் தொடர்பு இருக்கிறதா என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க விரும்பினர்.

உடலில் பாதிப்பு

உடலில் பாதிப்பு

பகல் நேரங்களில் வேலை செய்பவர்களுக்கும் மாலை அல்லது இரவு நேர ஷிப்ட்களில் வேலை செய்பவர்களுக்கும் உடலில் என்னென்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர். 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ஷிப்ட் முறைகளில் வேலை செய்த 286,825 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் 37 முதல் 72 வயதிற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

READ  நான் பாஜகவில் இணைகிறேனா...? பிஸ்கோத் காமெடியை விட பெரிய காமெடியாக இருக்கே... கலாய்த்த சந்தானம்..! | Actor santhanam says, I did not join the BJP

இரவு நேர ஷிப்ட்

இரவு நேர ஷிப்ட்

இதில் 83 சதவிகிதம் பேர் வழக்கமான அலுவலக நேரங்களில் வேலை செய்தனர். அதே நேரத்தில் 17 சதவிகிதம் பேர் ஷிப்ட் முறைகளில் வேலை செய்தனர். இதில் இரவு ஷிப்ட் வேலை செய்பவர்களும் அடங்குவர். பகல் நேரம், இரவு நேரம் என மாறி மாறி ஷிப்ட்களில் வேலை செய்பவர்களின் உடலில் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டது.

கடுமையான பாதிப்பு

கடுமையான பாதிப்பு

ஒரே ஷிப்டாக இல்லாமல் மாறி மாறி ஷிப்ட முறையில் வேலை செய்வதால் ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. ஆய்வில் பங்கேற்றவர்களில் 14,238 பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்தது. இதில் 4783 பேருக்கு மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் புகை பிடித்தனர், மது குடிப்பவர்களாகும் இருந்தனர். குறைவான மணி நேரமே தூங்கும் அவர்கள் ராக்கோழிகளாகவும் ஆந்தைகளாகவும் விழித்து இருந்து ஆரோக்கியத்தை கெடுத்துக்கொண்டனர்.

என்னென்ன பாதிப்பு

என்னென்ன பாதிப்பு

பணிபுரியும் அலுவலக நேரங்களுடன் ஒப்பிடுகையில், ஷிப்ட் தொழிலாளர்கள் ஆண்கள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள். அவர்கள் குறைந்த ஆல்கஹால் குடித்தார்கள், குறைவான மணிநேரம் தூங்கினார்கள், அதிக நேரம் வேலை செய்தார்கள். இதே போல மூன்று ஷிப்ட்களில் மாறி மாறி வேலை செய்யும் தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதில் சாதாரண ஷிப்ட்டில் வேலை செய்பவர்களை விட இரவு ஷிப்டில் வேலை செய்பவர்களுக்கு 36 சதவிகிதம் ஆஸ்துமா பாதிப்பு இருந்து தெரியவந்தது.

இதய நோய் பாதிப்பு

இதய நோய் பாதிப்பு

இதே போல மாறி மாறி ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு மூச்சுத்திணறல், காற்றுப்பாதையில் விசில் சத்தம் நுரையீரல் பாதிப்பு 20 சதவிகிதம் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதே போல பல வருடங்களாக பல்வேறு ஆய்வுகளில் இரவு ஷிப்ட் வேலைக்கும், இதய நோய்க்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டு வருகிறது. அதில் ஒரு ஆராய்ச்சியில் இரவு ஷிப்ட் வேலை இதய நோயின் அபாயத்தை 40 சதவீதம் அதிகரிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் அறிகுறி

சர்க்கரை நோய் அறிகுறி

ஜப்பானிய ஆய்வு ஒன்றில் நைட்ஷிப்ட் வேலை பார்ப்போரில் 50 சதவீதத்தினருக்கு சர்க்கரை நோயின் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 16 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வோருக்கு சர்க்கரை நோயின் அபாயம் உள்ளது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, இது வளர்சிதை மாற்ற குறைபாடுகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது.

READ  தமிழக மருத்துவ தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர்.. நவம்பர் 18ம் தேதி துவங்குகிறது கவுன்சிலிங் | Tamilnadu medical counseling is scheduled to begin on November 18.

என்னென்ன நோய்கள்

என்னென்ன நோய்கள்

ஒழுங்கற்ற ஷிப்ட்டுக்களில் வேலை செய்தால், குறைந்த காலத்தில் பெரிய ஆரோக்கிய பிரச்சனையின் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடும். அதில் உடல் களைப்பு மட்டுமின்றி, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற இரைப்பைக் குடல் நோய்களை உண்டாக்கும். ஆனால் சரியாக கவனித்து சிகிச்சை மேற்கொண்டால், சிறிய பிரச்சனைகள் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

நன்றி