பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது.. திமுகவில் பரபரப்பு! | DMK MLA Poongothai Alladi Aruna attempts suicide

0
60

Thirunelveli

oi-Hemavandhana

|

நெல்லை: திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உட்கட்சி பூசல் காரணமாக கடுமையான மனஅழுத்தத்தில் அவர் இருந்ததாகவும், அதனால் நிறைய தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. இது திமுக தொண்டர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்… இவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

DMK MLA Poongothai Alladi Aruna attempts suicide

மேலும் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆலங்குளம் தொகுதியில் இருந்து திரும்பவும் எம்எல்ஏவானார்.. கருணாநிதி மீது அளவுகடந்த பற்றை கொண்டிருந்தவர்.. தற்போதும் திமுகவில் தீவிரமாக சுழன்று வேலை பார்த்து வருபவர்.

இந்நிலையில், பூங்கோதை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.. இதையடுத்து, உடனடியாக அவரை நெல்லை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.. எனினும், அவர் தற்கொலை முயற்சி செய்ததற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.. இதை திமுக தரப்பும், ஆஸ்பத்திரி தரப்பும் உறுதியாக தெரிவிக்கவும் இல்லை. ஆனால், மருத்துவமனையில் பூங்கோதை சிகிச்சை பெற்று வருவதாகவும், பயப்படும்படி ஒன்றும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சையில் உள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளது.

அண்மையில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் விவகாரத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார் பூங்கோதை.. குறிப்பாக, நேற்று கடையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூங்கோதை அவமரியாதை செய்யப்பட்டதாக தெரிகிறது.. சிவ பத்மநாபன், துரை என்ற இரண்டு மாவட்டச் செயலாளர்களும் பூங்கோதைக்கு ரொம்ப ஜூனியர்கள்.. இவர்களுக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்டதில் இருந்தே உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ளது.

சகோதரிக்கு மாமனாரால் பாலியல் தொல்லை?.. அதான் சுட்டுட்டேன்.. சவுகார்பேட்டை கொலையாளி பரபர வாக்குமூலம்

இந்த மன அழுத்தம் காரணமாகவே பூங்கோதை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிறார்கள். அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இப்படி ஒரு பகீர் முடிவை எடுத்துள்ளது திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

நன்றி