விபத்துக்கு டிரைவர் மட்டுமா காரணம் ? லாரி உரிமையாளர்களும் பொறுப்புதான்

0
547

நள்ளிரவு தாண்டி, அதிகாலை வரையிலான நேரம், டிரைவர்களை அசதிக்குள்ளாக்கும் தருணம். களைப்புடன் வாகனத்தை இயக்கும்போது, தன்னையறியாமல் டிரைவர் துாங்கி விடுவதுண்டு. துாக்கம் வருவது போல் உணர்ந்தால், இடையில் உள்ள டோல்கேட் அல்லது உகந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி, ஓய்வெடுத்த பின்னும், டீ உள்ளிட்ட பானங்களை அருந்திச் சோர்வு நீங்கிய பின்னும், வாகனங்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இதை டிரைவர்கள் பின்பற்று வதில்லை. வாகன உரிமையாளர்களும் அறிவுறுத்துவதில்லை. பல நேரங்களில், நாள் கணக்கில் டிரைவர்கள் போதிய ஓய்வின்றி லாரிகளை இயக்க, உரிமையாளர்களால் வற்புறுத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. நேற்று கோர விபத்து நேர்ந்தபோது நேரம் அதிகாலை 3:30 மணி. உயிர்களைப் பலிவாங்கிய கன்டெய்னர் லாரி, கொச்சியிலிருந்து புறப்பட்டிருக்கிறது.

tuty news

 

பெங்களூருவுக்கு வேகமாகச் செல்லும் எண்ணத்தில், கன்டெய்னர் லாரி டிரைவர் ஹேமந்த்ராஜ், ஓய்வின்றி இயக்கியுள்ளார்.’துாக்கக் கலக்கத்தில்தான் லாரி டிரைவர், மையத்தடுப்பின் மீது லாரியை ஏற்றியுள்ளார். பின், அது கட்டுப்பாட்டை இழந்து, 19 உயிர்களைப் பலிவாங்க காரணமாக அமைந்திருக்கிறது. மையத்தடுப்பின் மீது ஏறிய பின்தான், லாரி டயர் வெடித்திருக்க வேண்டும். டயர் வெடித்ததால்தான் விபத்து நேர்ந்ததாகக் கூறுவது, திசை திருப்புவதற்காகத் தான்’ என்று, விபத்து கோரத்தைப் பார்த்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.

விபத்துக்குக் காரணமான டிரைவர்மீது, 304ஏ (விபத்து) என்று சாதாரணப்பிரிவில், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொலை குற்றங்களுக்கு நிகரான பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், டிரைவர் மட்டுமல்லாது, கன்டெய்னர் லாரியின் உரிமையாளர்மீதும் வழக்கு பாய வேண்டும். அப்போது தான், எதிர்காலத்தில், இது போன்ற கோர விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். விபத்தில் பலியானவர்களின் உயிர்கள் விலைமதிப்பற்றவை. 19 பேரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு எந்த வார்த்தைகளும் இல்லை.

News Source : https://www.dinamalar.com/news_detail.asp?id=2485785

READ  இந்திய பிரதமர் மோடியால் பிரபலமான குகை: 78 பேர் முன்பதிவு செய்திருந்தனர்