Jobs
oi-Vishnupriya R
சென்னை: தமிழகத்தின் மிகப் பெரிய முன்னணி நிறுவனங்கள் பங்கு பெறும் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தன்னார்வலர்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் இன்றும் நாளையும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மதர் தெரசா பொறியியல் கல்லூரி, மேட்டுச்சாலை, இலுப்பூர் , புதுக்கோட்டையில் தமிழகத்தின் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு/ 10ஆம் வகுப்பு/ பிளஸ் 2/ டிப்ளமோ/ பட்டப்படிப்பு/ பி.இ. / எம்பிஏ/ ஆசிரியர்கள்/ செவிலியர்கள்/ பார்மசிஸ்ட்/ கேட்டரிங் படித்தவர்கள் பங்கேற்கலாம்.
இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வரையாகும். கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவையுடன் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொண்ட நபர்களுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

75-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். 1000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படவுள்ளனர். திறன் மேம்பாடு இலவச பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள் சேர்ப்பு நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பிற்கான தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அரசு, ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கையும், சுயவேலை வாய்ப்பு, கடனுதவிக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!