கொரொனா தடுப்பு நடவெடிக்கையாக நடிகர் ராகவா லாரன்ஸ் 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்

0
78

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதி வழங்கும்படி, பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆகியோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

இதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.3 கோடி வழங்கி உள்ளார்.

அவர், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பெப்சி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், தினக்கூலிகள் மற்றும் அவர் பிறந்த ராயபுரம் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் வழங்கியுள்ளார்.

READ  செம்பரம்பாக்கம் ஏரி நீரை அளவுடன் திறந்துவிடுங்கள்.. முதல்வருக்கு கடிதம் எழுதிய பிரபல நடிகர் | Actor Vijayakumar writes CM about Chembarambakkam Lake