பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் இருப்பார்கள் என தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

0
40

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து பாதுகாப்புப்பணியில் காவல் துறையுடன் முன்னாள் படைவீரர்களை பணியமர்த்தப்படுகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து பாதுகாப்புப் பணியில் காவல் துறையுடன் முன்னாள் படைவீரர்களை பணியமர்த்திட ஆணைகள் பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 60 வயதிற்கு உட்பட்ட திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் 10-04-2020 முதல் 20-04-2020 வரை காவலர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கான மதிப்பூதியம் ஏற்கனவே தேர்தல் பணிகளில் வழங்கப்பட்டது போல் அளிக்கப்படும்.

பணியமர்வு மாவட்ட எஸ்பி., மூலம் முன்னாள் படைவீரர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே பணியமர்த்தப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் நாட்டு நலன் கருதி தானாகவே முன்வந்து 09-04-2020 பிற்பகல் அல்லது 10-04-2020 முற்பகல் தங்களுக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தை அனுகி பணியில் சேர்ந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பணியின் போது உரிய பாதுகாப்பு சாதனங்கள் காவல்துறை மூலம் வழங்கப்படும். மேலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் தூத்துக்குடி தொலைபேசி எண். 0461 -2902025 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விருப்பத்தை தெரிவித்திடவும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

READ  உடன்குடி பிறைக்குடியிருப்பு ஊரில் கோவில் கொடைவிழா இன்று தொடக்கம்