தீபாவளி பலகாரம் போளி செய்வது எப்படி

0
51
தீபாவளி பலகாரம் போளி செய்வது எப்படி
தீபாவளி பலகாரம் போளி செய்வது எப்படிதீபாவளி பலகாரம் போளி செய்வது எப்படி

தீபாவளி பலகாரம் போளி செய்வது எப்படி?

கூடிய விரைவில் வரப்போகுது தீபாவளி இன்னமும் உங்கள் வீட்டில் பலகாரம் (diwali recipes) செய்ய ஆரமிக்கலயா, வாங்க இன்று முதல் தீபாவளி பலகாரம் செய்ய ஆரமிப்போம். முதலில் நாம என்ன செய்யப்போகிறோம் என்றால் மைதா மாவில் செய்யக்கூடிய சுவையான போளி செய்முறை விளக்கங்களைத் தெரிந்து கொள்வோம்.

How to make boli in tamil

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்களின் எண்ணிக்கை: 9

  • மைதா மாவு – இரண்டு கப்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • கடலைப் பருப்பு – ஒரு கப்
  • பொடித்த வெல்லம் – 1 1/2 கப்
  • நெய் – 1/2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு சுத்தமான பவுலில் இரண்டு கப் மைதா மாவு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

அதன் பின்பு இந்த மைதா மாவுடன் நான்கு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து மைதா மாவினை பிசைய வேண்டும். அதாவது சப்பாத்தி மாவை விடத் தளர்வாகப் பிசைந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவனது 1/2 மணி நேரம்வரை நன்றாக ஊற வேண்டும்.

இப்பொழுது பூரணம் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ஒரு கப் கடலைப் பருப்பினை நன்றாக அலசி இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.  கடலைப் பருப்பு வெந்தவுடன். அவற்றில் இருக்கும் நீரினை வடித்து ஆறவைத்து பருப்பினை மிக்சியில் சேர்த்து மைபோல் அரைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 1/2 கப் பொடித்த வெல்லம் மற்றும் 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்றாகக் கரைத்து கொள்ளவும்.

வெல்லம் நன்கு கரைந்தவுடன் அவற்றை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் அரை கப் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

தேங்காய் நன்கு வறுந்தவுடன் வெல்ல பாகினை சேர்க்க வேண்டும். பின் 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூளினை சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.

பின்பு இதனுடன் அரைத்து வைத்துள்ள பருப்பினை சேர்த்து கட்டிகள் பிடிக்காத வாறு நன்றாகக் கிளறி கொள்ளவும்.

பூரணமானது நன்றாக ஒன்று சேர்ந்து திரண்டு வரும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாகக் கிளறி கொள்ளவும். (கையைத் தண்ணீரில் நனைத்து பூரணத்தை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டாத வாறு இருக்க வேண்டும்)

இப்பொழுது பிசைந்த மைதா மாவு மற்றும் பூரணம் இரண்டையும் உருண்டைகள் பிடித்துத் தயாராக வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது நெய் தடவி, அதில் சிறிதளவு மைதா மாவை வைத்துப் பூரி வடிவில் தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் வாழை இலையில் சிறிது நெய் தடவி மாவை வைத்து விரல்களால் சப்பாத்தி போல் தட்டி (பூர்ணம் வெளியில் வரக் கூடாது), தோசைக்கல்லில் போட்டு, அதைச் சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் பொன்னிறமாக அதாவது சிவக்க வேகவைத்து எடுத்தால் சுவையான போளி தயார்.

இந்தத் தீபாவளிக்கு போளியை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள் நன்றி.

READ  சர்க்கரை நோயை விரட்ட எளிய வழி