உடன்குடியில் பா.ஜ.காவினர் இந்திய வீரர்களின் இறப்பிற்கு வீர வணக்கம் செலுத்தினர்.

0
54

இந்தியாவின் லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த 16-ந் தேதி இரவு திடீர் மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

உடன்குடியில் பா.ஜ.காவினர் இந்திய வீரர்களின் இறப்பிற்கு வீர வணக்கம் செலுத்தினர்.

இதில் உடன்குடி பாரத ஜனதா கட்சி தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் திரு சிவமுருக ஆதித்தன் அவர்கள், ஒன்றிய தலைவர் திரு ஜெயக்குமார், ஒன்றியபொது செயலாளர் திரு அழகேசன், ஒன்றிய பொதுச்செயலாளர் சங்கரகுமார ஐயன், ஒன்றிய துணைத்தலைவர் திரு பசுபதி சிவசிங், ஒன்றிய துணைத்தலைவர் திரு சின்னத்துரை, ஒன்றிய செயலாளர் திரு ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் திரு துரைராஜ், ஒன்றிய செயலாளர் திருஜோதி, முன்னாள் ஒன்றிய தலைவர் திருநாகரன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் திரு ஜெயம் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு பரமசிவம், உடன்குடி ஒன்றிய சமூக ஊடகப்பிரிவு தலைவர் திரு சுதாகர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

மேலும் இந்த நிகழ்ச்சியில் சீன பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் பயன்படுத்தாமல் இருக்கப்போவதாக உறுதிமொழி ஏற்றனர்

READ  மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை ஆன்லைனில் நடத்த முடியாதது ஏன்?- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் | Minister Vijayabhaskar on medical counselling