நாளை சூரியகிரகணம் நிகழ்வு

0
284

சென்னை; சூரிய கிரகணம் ஜூன் 21 ல் நிகழ்கிறது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்படும்.

ஜூன் 21ல் நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால், சூரியன் வளையம் போன்று தோன்றும். இது ‘வளைய சூரிய கிரகணம்’ என அழைக்கப்படுகிறது. இது காலை 10:22 முதல் பகல் 1:32 மணிவரை நீடிக்கிறது. மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் தெரியும். ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் 34 சதவீதம் தெரியும். அடுத்த சூரிய கிரகணம் 2020 டிச., 14ல் தோன்றும். வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. தொலைநோக்கி, சூரிய கண்ணாடிமூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.

READ  மோட்டார் வாகன இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு