தமிழகத்தில் 17,728 பேருக்கு கொரோனா; 127 பேர் பலி

0
43

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 27) புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆகவும்,தறபோது பலி எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது..!

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 54 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 17,728 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 10,289 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 7 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என 9 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது..!

latest tamil news

நேற்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,342 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,256 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,088 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 15,105 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1535 பேரும் உள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள்ளது …

READ  பீகாரில் தனிப்பெரும் கட்சி வாய்ப்பை சொற்ப தொகுதிகளில் இழந்தது பாஜக- ரேசில் முந்தியது ஆர்ஜேடி! | BJP emerges as Single Largest Party in Bihar