டி.எம்.பி. சார்பில் மொபைல் ஏ.டி.எம். சேவை

0
107

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரொனா வைரஸ் தொற்று நோயின் காரணமாக இந்தியா முழுவதிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் மொபைல் ஏ.டி.எம். சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரம் முழுவதிலும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப மொபைல் ஏ.டி.எம். சேவையை வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி நேற்று காலை தொடங்கி வைத்தார்.

இந்த மொபைல் ஏ.டி.எம். தூத்துக்குடி மாநகர் பகுதிகளான மில்லர் புரம், அண்ணா நகர், பிரையண்ட் நகர், சிதம்பரநகர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உட்பட பல இடங்களுக்கு செல்கிறது.

வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

READ  நின்றதே பிரிக்கத்தானே.. 5.70% வாக்குகள் பெற்றும்.. ஒரே ஒரு தொகுதியில் வென்ற சிராக் பாஸ்வான் கட்சி!