தமிழ்நாட்டில் தயாராகும் ஆப்பிள் ஐபோன் 13 சோதனை தயாரிப்பு தொடக்கம்

iphone 13 made in tamilnadu

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 13 ஸ்மார்ட்போன் தயாரிப்பை இந்தியாவில் தொடங்கவுள்ளது. இதற்கான சோதனை தயாரிப்பை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள பாஸ்கான் நிறுவனத்தில் தொடங்கியுள்ளது.

iphone 13 made in tamilnadu
iphone 13 made in tamilnadu

ஹைலைட்ஸ்:

 • இந்தியாவில் உற்பத்தியாக போகும் ஆப்பிள் ஐபோன் 13
 • சென்னை பாஸ்கான் ஆலையில் தயாராகிறது
 • தற்போது இதற்கான சோதனை தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது.
 • iphone 13 made in tamilnadu

உலகளவில் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை வாங்க பயனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அதன் விலையை கண்டு சிலர், அந்த ஆசையை அப்படியே கிடப்பில் போடுவதுண்டு. இதனை சரிசெய்ய ஆப்பிள், பாஸ்கான் உடன் இணைந்து இந்தியாவில் ஆப்பிள் நிறுனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஒப்பந்தமிட்டது. இதுபோலவே, பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனம், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்குகிறது.

இச்சூழலில், தமிழ்நாடு தலைநகர் சென்னையில் உள்ள பாஸ்கான் ஆலையில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவான ஐபோன் 13ஐ தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. தற்போது, இதற்கான சோதனை தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது.

உள்நாட்டிலேயே ஐபோன்கள் தயாரிக்கப்பட்டால், புதிய ஸ்மார்ட்போன்கள் கூட பயனர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும். மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் 70% விழுக்காடு இந்திய பயனர்களுக்காக இந்திய சந்தையிலேயே விற்கப்படுகிறது. மீதமுள்ள 30% விழுக்காடு ஸ்மார்ட்போன்கள் மட்டுமே, உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆப்பிள் iphone தொகுப்புகளில் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களில், ஐபோன் 13 இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வகையாக உள்ளது. ஆப்பிள் ஏற்கனவே ஐபோன் 11 , ஐபோன் 12 ஸ்மார்ட்போன் வகைகளை பாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கிறது. ஐபோன் சிறப்பு பதிப்பை பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரான் ஆலையில் தயாரித்து வருகிறது.

தற்போது உலகளவில் செமிகண்டக்டர் சிப்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் சிப்புகள் விநியோகத்தை உறுதிப்படுத்தியது. அது இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்க உதவியுள்ளது. இணையவழி வகுப்புகள், வீட்டிலிருந்தே வேலை போன்ற காரணங்களால் ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை இரண்டு ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது.

2020ஆம் ஆண்டில் 30 லட்சம் யூனிட்களாக இருந்த ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை, நடப்பாண்டில் 40 லட்சம் ஆக இருக்குமென நிறுவனம் எதிர்பார்த்திருக்கிறது. ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபமும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு 2020இல் ரூ.1,226 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 13 சிறப்பம்சங்கள்

 • சூப்பர் ரெட்டினா XDR தொடுதிரை, 460 பிக்சல் டென்சிட்டி (திரை அடர்த்தி)
 • 6 கோர்களைக் கொண்ட ஏ15 பயோனிக் சிப்
 • ஐஓஎஸ் 15
 • பின்பக்கம் 12 + 12 மெகாபிக்சல்களைக் கொண்ட இரட்டை கேமரா
 • 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
 • பேஸ் ஐடி, காற்றழுத்தமானி (பேரோமீட்டர்), 3 ஆக்சிஸ் கைரோ, அக்செலெரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி, சுற்றுப்புற ஒளி ஆகிய உணர் கருவிகள் உள்ளது
 • 5ஜி, வைஃபை, என்.எப்.சி, ப்ளூடூத்
 • வயர்லெஸ் சார்ஜிக் ஆதரவு

iphone 13 made in tamilnadu

thanks to/tamil.samayam

நாங்கள் தினமும் உங்களுக்காக வேலை தேடுவதில் மிகவும் சிரமம் படுகிறோம் அதனால் எங்களது இணையதளத்திலும் youtube லும் suport செய்யுங்கள்

Channel Link

Website Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *