பொறியியல் படித்தவர்களுக்கு BHEL-ல் வேலை எழுத்துத் தேர்வு இல்லை.. 71 ஆயிரம் வரை சம்பளம்!

BHEL JOB

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் பவர் செக்டார் மேற்கு மண்டலத்தில் 36 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், விவரங்களை கீழே விரிவாக பார்க்கவும்…

JOB IN BHEL - 2022

ஹைலைட்ஸ்:

  • BHEL-யில் 36 காலிப்பணியிடம்.
  • பொறியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 11 ஆகும்.
  • BHIL

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) பல பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் பவர் செக்டார் மேற்கு மண்டலத்தில் 36 காலியிடங்களை நிரப்பும். இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றன. ஆன்லைன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு ஜனவரி 11, 2022 ஆகும். விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களை https://www.bhel.com/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

முக்கியமான தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்க தேதி – 28 டிசம்பர் 2021.
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 11 ஜனவரி 2022.
  • விண்ணப்பப் படிவத்தின் அனுப்புவதற்கான கடைசி தேதி – 14 ஜனவரி 2022.

காலிப்பணியிட விவரம்:

  • பொறியாளர் – 10
  • மேற்பார்வையாளர்- 26

கல்வித் தகுதி:

பொறியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில் இன்ஜினியரிங்கில் நான்கு ஆண்டு முழுநேர இளங்கலைப் பட்டம் / ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் அனுபவமும் அவசியம்.

மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் சிவில் இன்ஜினியரிங்கில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பணியில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் விண்ணப்ப பிரதிகளை மூத்த துணை மேலாளர், BHEL, Power Sector, Western Region, Nagpur 44001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கலாம். பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 71,040, மேற்பார்வையாளர் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூ. 39,670 சம்பளமாக வழங்கப்படும்.

நாங்கள் தினமும் உங்களுக்காக வேலை தேடுவதில் மிகவும் சிரமம் படுகிறோம் அதனால் எங்களது இணையதளத்திலும் youtube லும் suport செய்யுங்கள்

Channel Link

Website Link

THANKS TO /tamil samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *